ஸ்ரீ மன் மத்வாச்சாரியாரின் மத்வ குரு பரம்பரையில் வழி வந்த ஆச்சாரியர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் . ஞான பூமி என்றழைக்கப்படும் நம் பாரத தேசத்தின் தென் பகுதியான தமிழ் நாட்டில், சிதம்பரத்திற்கு அருகே உள்ள புவனகிரி என்ற கிராமத்தில் , 1595ல் பட்டிச் சந்து வீதியில், திருவேங்கடவன் அருளுடன் த ந்தை திம்மன்ன பட்டருக்கும், தாய் கோபிகாம்பாளுக்கும் மூன்றாவது பிள்ளையாக அவதரித்தார். இவரது மூத்த சகோதரி வேங்கடாம்பிகை மற்றும் மூத்த சகோதரர் குருராஜர் ஆவர். இவர் பூர்வாசரமத்தில் வேங்கடநாதன் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார். இளமைக்கல்வியை மதுரையில் பயின்றார். காலத்தின் சூழ்நிலையால் பெற்றோரை இழந்தவர், மேலும் வேதங்களை கற்க கும்பகோணம் ஸ்ரீ மடம் சென்று குருகுலத்தில் சேர்ந்தார். ஸ்ரீ ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் அவர்களின் வழி காட்டுதலில் வேத வியாக்யானங்களை கற்றார். தன் ஆத்ம ஞானத்திற்கு அங்கீகாரமாக “ பரிமளாச்சாரியார் ” பட்டமும் பெற்றார். தனது சகோதர, சகோதரியின் அறிவுரைக்கு ஏற்ப...
Comments
Post a Comment