ஸ்ரீ மன் மத்வாச்சாரியாரின் மத்வ குரு பரம்பரையில் வழி வந்த ஆச்சாரியர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் . ஞான பூமி என்றழைக்கப்படும் நம் பாரத தேசத்தின் தென் பகுதியான தமிழ் நாட்டில், சிதம்பரத்திற்கு அருகே உள்ள புவனகிரி என்ற கிராமத்தில் , 1595ல் பட்டிச் சந்து வீதியில், திருவேங்கடவன் அருளுடன் த
ந்தை திம்மன்ன பட்டருக்கும், தாய் கோபிகாம்பாளுக்கும் மூன்றாவது பிள்ளையாக அவதரித்தார். இவரது மூத்த சகோதரி வேங்கடாம்பிகைமற்றும் மூத்த சகோதரர் குருராஜர் ஆவர். இவர் பூர்வாசரமத்தில் வேங்கடநாதன் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார். இளமைக்கல்வியை மதுரையில் பயின்றார். காலத்தின் சூழ்நிலையால் பெற்றோரை இழந்தவர், மேலும் வேதங்களை கற்க கும்பகோணம் ஸ்ரீ மடம் சென்று குருகுலத்தில் சேர்ந்தார். ஸ்ரீ ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் அவர்களின் வழி காட்டுதலில் வேத வியாக்யானங்களை கற்றார். தன் ஆத்ம ஞானத்திற்கு அங்கீகாரமாக “ பரிமளாச்சாரியார்” பட்டமும் பெற்றார். தனது சகோதர, சகோதரியின் அறிவுரைக்கு ஏற்ப “சரஸ்வதி பாய்” என்ற புண்ணியவதியை விவாகம் செய்தார். மாணவர்களுக்கு வேத வியாக்யானங்களை பயிற்ருவிக்கும் பண்டிதராக தன் பணியை துவக்கியவர் , வயிற்று பிழைப்பிற்காக கல்வியை வியாபாரமாக்க விரும்பாததால் வாழ்வில் பல இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை வந்தது. செய்வதறியாது தன மனைவியின் யோசனையின்படி வேங்கடநாதர் தம் குடும்பத்தினருடன் மீண்டும் கும்பகோணம் ஸ்ரீ மடத்திற்க்கே சென்றார். காலம் கடந்தது தன் குருவிற்கு துணையாக மடத்து பணிகளில் தம் வாழ்நாளை கடத்தி தம் குடும்பத்தினருடன் ஜீவனம் செய்துவந்தார். வேங்கடநாதர் வாழ்வை புரட்டி போடும் செய்தி ஒன்று அவர் தலையில் இடியாய் விழுந்தது. ஆம்… குரு சுதீந்திரர் தனது வயதின் மூப்பின் காரணமாக தனக்கு பிறகு ஸ்ரீ மடத்தின் பொறுப்புகளை ஏற்க்க வேங்கடனாதரை சன்னியாச பீடம் ஏற்கச் சொன்னார். வேங்கடநாதர் தன் குடும்பத்தை காரணம் காட்டி சன்னியாச பீடம் ஏற்க மறுத்த நிலையில் அன்று இரவு கலைமகள் தாய் சரஸ்வதி அவர்முன் தோன்றி அவர் பிறப்பின் காரணத்தை சொல்லி சந்நியாசபீடம் ஏற்க வேங்கடனாதரை சம்மதிக்க வைத்தார். பொழுது புலர்ந்தது தஞ்சை மண் விழாக்கோலம் பூண்டது. இங்கு கும்பகோணத்தில் வேங்கடநாதன் குடும்பம் கண்ணீர் கோலம் பூண்டது. விதியின் வசத்தால் சரஸ்வதிபாய் தன உயிரை மாய்த்துக்கொண்டார். அங்கு தஞ்சை அரண்மனையில் மன்னர் ரகுநாத பூபால்முன்னிலையில்,1621ல் குரு சுதீந்திரர் தலைமையில் , இவரது திருக்கரங்கலாலேயே வேங்கடநாதருக்கு பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டு , ஸ்ரீ ராகவேந்த்ர தீர்த்தர் என்னும் நாமகரணமும் சூட்டப்பட்டது.சன்னியாச பீடம் ஏற்ற வர் சுமார் பனிரெண்டு ஆண்டு காலம் நாம் மேற்சொன்ன தஞ்சை வடவாற்றங்கரையில் யோகவாழ்வு மேற்கொண்டார். தஞ்சை அரண்மனையில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் அருகாமையில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த வடவாற்றங்கரை. பனிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகே ஸ்ரீ ராகவேந்த்த்ர தீர்த்தர் லோக சஞ்சாரமாக இங்கிருந்து புறப்பட்டு பல மகிமைகள் புரிந்து தற்போது ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஆதோனி ஜில்லாவில், சித்தி மசூத்கானுக்கு சொந்தமான பகுதியில் இருந்த மாஞ்சாலம்கிராமத்தில், கிராம தேவதையான மாஞ்சாலை அம்மன் அருளுடன் 1671ல் ஜீவ பிருந்தாவன் பிரவேசம் அடைந்தார். பனிரெண்டு ஆண்டுகள் இன்றும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் அவர் வாசம் செய்த அந்த புனித பூமியில் பிருந்தாவனஸ்தராக தன்னை நாடி வரும் பக்த்தர்களின் குறைகளை போக்கும் காமதேனு கற்பக விருட்ஷமாக அருளாசி வழங்கி வருகிறார்.
Click here :Bhuvanagiri Sri Raghavendra Swamy Avatara stala Mutt
புவனகிரி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி அவதார ஸ்தலம் மடம்

Comments
Post a Comment