Skip to main content

ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் தூய தொண்டு நிறுவனம்

 புவனகிரி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் புனித தொண்டு நிறுவனம் என்ற ஒரு அமைப்பு 1.2.1993 பதிவுசெய்யப்பட்டது 25.6.2007 அறக்கட்டளை காலத்திற்கேற்றபடி அந்த அறக்கட்டளை திருத்தி அமைக்கப்பட்டது
ஸ்ரீ ராகவேந்திரா ஆலயத்தில் நித்திய பூஜைகளை செவ்வனே நடைபெற ஏற்பாடு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்களை வழங்குவது பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது இலவச கண் பரிசோதனை முகாம் போன்ற மருத்துவ உதவிகள் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் அன்னதானம் வழங்குவது ஆலயத்தில் விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்தல் போன்றவற்றை அறக்கட்டளை செய்து வருகின்றது

Click here :Bhuvanagiri Sri Raghavendra Swamy Avatara stala Mutt

புவனகிரி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி அவதார ஸ்தலம் மடம்

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர்

ஸ்ரீ மன் மத்வாச்சாரியாரின் மத்வ குரு பரம்பரையில் வழி வந்த ஆச்சாரியர்களில் குறிப்பிடத்தக்கவர்  ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள்  . ஞான பூமி என்றழைக்கப்படும் நம் பாரத தேசத்தின் தென் பகுதியான தமிழ் நாட்டில், சிதம்பரத்திற்கு அருகே உள்ள  புவனகிரி  என்ற கிராமத்தில் , 1595ல் பட்டிச் சந்து வீதியில், திருவேங்கடவன் அருளுடன்  த ந்தை திம்மன்ன பட்டருக்கும், தாய் கோபிகாம்பாளுக்கும்  மூன்றாவது பிள்ளையாக அவதரித்தார். இவரது மூத்த சகோதரி  வேங்கடாம்பிகை மற்றும் மூத்த சகோதரர்  குருராஜர்  ஆவர். இவர் பூர்வாசரமத்தில் வேங்கடநாதன் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார். இளமைக்கல்வியை மதுரையில் பயின்றார். காலத்தின் சூழ்நிலையால் பெற்றோரை இழந்தவர், மேலும் வேதங்களை கற்க கும்பகோணம் ஸ்ரீ மடம் சென்று குருகுலத்தில் சேர்ந்தார்.  ஸ்ரீ ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் அவர்களின் வழி காட்டுதலில் வேத வியாக்யானங்களை கற்றார்.  தன் ஆத்ம ஞானத்திற்கு அங்கீகாரமாக “  பரிமளாச்சாரியார் ” பட்டமும் பெற்றார். தனது சகோதர, சகோதரியின் அறிவுரைக்கு ஏற்ப...

ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் - 02

உலகில் எப்பொழுது அதர்மம் தலை எடுக்கிறதோ அப்பொழுது இந்த பூவுலகில் நான் தோன்றுவேன் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் அர்ஜுனனுக்கு கூறுகிறார். அதர்மம் தலையெடுக்கும் காலத்தில் இறைவனை அல்லது இறைத் தன்மை பெற்ற மகான்கள் இந்த உலகில் தோன்றுவது வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் தான் ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்பு நமது புவனகிரியில் வெள்ளாற்றங்கரையில் தோன்றியவர் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் அவர்களது பெற்றோர் திம்மண்ண பட்டர் மற்றும் கோபிகாம்பாள் என்ற பிராமண தம்பதிகளாவர். ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள், மத்வாச்சாரியாரது துவைத சித்தாந்தம் ஆகிய “ஹரியே சர்வோத்தமன் என்கிற கொள்கையை உலகுக்கு ஒளி காட்டும் கலங்கரை விளக்கமாய் அறிவித்தவர். ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிகளது முற்பிறப்பு சங்கு கர்ணனாகவும், துவாபரயுகத்திலே பிரகலாதராகவும் பாகளீக மகாராஜாவாகவும், பின்னர் ஸ்ரீ வியாசராஜ ஸ்வாமிகளாகவும் விளங்கியவை ஆகும். ஸ்ரீஸ்வாமிகள் இளம் வயதிலேயே அபார கலை, சாத்திர ஞானங்கள் பெற்று விளங்கினார். சரஸ்வதி கடாட்சம் நிறைந்த சுவாமிகள் குடும்பத்திற்கு லட்சுமி கடாட்சம் சிறிதும் இல்லை. வறுமையிலேயே வாடி வதங்கி செய்வதறியாமல் திகை...