உலகில் எப்பொழுது அதர்மம் தலை எடுக்கிறதோ அப்பொழுது இந்த பூவுலகில் நான் தோன்றுவேன் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் அர்ஜுனனுக்கு கூறுகிறார். அதர்மம் தலையெடுக்கும் காலத்தில் இறைவனை அல்லது இறைத் தன்மை பெற்ற மகான்கள் இந்த உலகில் தோன்றுவது வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் தான் ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்பு நமது புவனகிரியில் வெள்ளாற்றங்கரையில் தோன்றியவர் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் அவர்களது பெற்றோர் திம்மண்ண பட்டர் மற்றும் கோபிகாம்பாள் என்ற பிராமண தம்பதிகளாவர்.
ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள், மத்வாச்சாரியாரது துவைத சித்தாந்தம் ஆகிய “ஹரியே சர்வோத்தமன் என்கிற கொள்கையை உலகுக்கு ஒளி காட்டும் கலங்கரை விளக்கமாய் அறிவித்தவர். ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிகளது முற்பிறப்பு சங்கு கர்ணனாகவும், துவாபரயுகத்திலே பிரகலாதராகவும் பாகளீக மகாராஜாவாகவும், பின்னர் ஸ்ரீ வியாசராஜ ஸ்வாமிகளாகவும் விளங்கியவை ஆகும். ஸ்ரீஸ்வாமிகள் இளம் வயதிலேயே அபார கலை, சாத்திர ஞானங்கள் பெற்று விளங்கினார். சரஸ்வதி கடாட்சம் நிறைந்த சுவாமிகள் குடும்பத்திற்கு லட்சுமி கடாட்சம் சிறிதும் இல்லை. வறுமையிலேயே வாடி வதங்கி செய்வதறியாமல் திகைத்து இறுதியில் கும்பகோணம் மத்வபரம்பரை மடாதிபதியான ஸ்ரீ சுதீந்தர சுவாமிகளிடம் சென்றடைந்தார்.
ஸ்ரீ ஸ்வாமிகள் ஸ்ரீ சுதீந்திரரிடம் திறமையாக ஸ்ரீ மத்வ சித்தாந்த பாடல்கள் கேட்டு குருவே வியக்கும் வகையில் “சுதா” என்ற பாடத்திற்கு அபூர்வ விளக்கம் எழுதி ஸ்ரீ பரிமளாச்சார் என்ற பட்டபெயரை ஸ்ரீ சுதீந்திரரால் சூட்டப்பெற்றார். இதற்கிடையில் ஸ்ரீ சுவாமிகளுக்கு சரஸ்வதிபாய் என்ற கற்புக்கரசியுடன் திருமணம் நிகழ்ந்தது. சுவாமிகள் புவனகிரியில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவித்தாலும் வேதங்களை பல மாணவர்களுக்கு கற்பித்து கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தார். அப்பொழுது புவனகிரிக்கு அருகாமையில் ஒரு கிராமத்தில் ஒரு பெரிய பிராமண விருந்தில் கலந்துகொள்ளச் சென்ற சமயம் அங்கு உள்ள ஒரு நாட்டாண்மைக்காரர் இவரது பெரிய உருவத்தைக் கண்டு இவருக்கு கடுமையாக ஒரு வேலையை தர எண்ணி வந்திருந்த பிராமணர்கள் அனைவருக்கும் பூசிக்கொள்ள சந்தனம் அரைக்குமாறு கோபத்துடன் உத்தரவிட ஸ்ரீ ஸ்வாமிகள் அக்கினி சூஜ்தம் சொல்லி அந்த சந்தனத்தை அரைத்தார். அந்த சந்தனத்தை விருந்துக்கு முன் பூசிக் கொண்ட அனைவரின் உடலும் அனலாய் தகித்தது. பின்னர் இது என்ன மாயம் என நாட்டாண்மைக்காரர் ஸ்ரீராகவேந்திரரை வினவ அவர் வருண சூஜ்தம் சொல்ல அனைவரின் உடம்பும் குளிர்ந்தது. இவ்வாறாக பல அற்புதங்களை ஸ்ரீஸ்வாமிகள் இளமையிலேயே நிகழ்த்தினார். தொடர்ந்து வறுமையின் கோரத்தாண்டவம் குறையாமலிருக்க ஸ்ரீ ஸ்வாமிகள் ஸ்ரீ சுதீந்திர மடத்திற்குச் சென்றார்.
ஸ்ரீ சுதீந்திரர் நோய்வாய்ப்பட்டு மூலராமரின் ஆராதனையை பொறுப்புள்ள சீடரிடம் ஒப்படைக்க நினைத்து ஸ்ரீராகவேந்திரரை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தினார். ஸ்ரீராகவேந்திரர் மறுக்காமல் சன்யாசத்தை ஏற்று ஸ்ரீ ராமர் பூஜை செய்யும் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் எனும் திருநாமம் பெற்ற பின்னர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தீர்த்த யாத்திரைக்கு சென்ற இடங்களிலெல்லாம் மாயாவதிகளை வாதில் வென்று துவைத சித்தாந்தத்தை வெற்றிக்கொடியாக நாட்டினார். யாத்திரையின் போது அவர் நிகழ்த்திய சித்துக்களும் அற்புதங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். மாடுகள் மேய்க்கும் சிறுவனை பீஜப்பூர் சுல்தானின் திவானாக அருள்புரிந்தார். ஒரு முஸ்லீம் நவாபின் பாம்பு கடித்து இறந்த குழந்தையையும், தம் பூஜையின் போது மாம்பழச்சாற்றில் தவறி விழுந்து இறந்த குழந்தையையும் உயிர்ப்பித்தார்.
முஸ்லிம் குறுநில மன்னர் ஒருவர் இவரை சோதிக்க எண்ணி ஒரு தட்டில் மாமிசத் துண்டுகளை துணியால் போர்த்தி இவர் முன்வைக்க அனைவரும் வியக்கும் வண்ணம் அவைகள் சுவாமிகள் தண்ணீர் தெளித்ததும் கனி வகைகளாக ஆயின. அந்த முஸ்லிம் மன்னர் இவரது அற்புத சக்திகளை உணர்ந்து சுவாமிகளின் பொற்பாதங்கள் பணிந்து தற்சமயம் மந்த்ராலயமாய் விளங்கும் “மாஞ்சாலா” என்ற பகுதியை ஸ்ரீ சுவாமிகள் கோரிய வண்ணம் கொடுத்தார்.
இந்த இடம் முற்பிறவியாகிய பிரகலாதன் யாகம் செய்த இடமாகும். ஸ்ரீ ஸ்வாமிகள் தனது சீடரான திவான் வெங்கண்ணாவை தம் பிருந்தாவனம் வடிவமைத்து கொடுக்குமாறு பணிந்து 73 ஆண்டுகள் மானுட உருவில் அருள்புரிந்து பின்னர் “இந்து எனகே கோவிந்தா” என்று மனமுருக பாடி பிருந்தாவன பிரவேசம் செய்தார்.
ஸ்ரீ ஸ்ரீ சுவாமிகள் அவரது முன் அவதாரங்களில் சேர்த்து வைத்த அனிஷ்ட புண்ணியங்களை பிருந்தாவனத்தில் ஜீவசமாதியில் இருந்து கொண்டு தன்னை வணங்கும் பக்த கோடிகளுக்கு வாரி வழங்கும் காமதேனு கற்பக விருட்சமாகவும் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் நமது பாரத தேச மட்டுமல்லாமல் உலகில் பல்வேறு இடங்களில் எல்லாம் வழங்குகிறார்.
ஆங்கிலதுரையான சர் தாமஸ் மன்றோவிற்கு பிருந்தாவனத்தில் இருந்து காட்சியளித்து பிரசாதம் வழங்கினார். பல்வேறு அற்புதங்களை பக்தர்களுக்காக செய்துவரும் கலியுக தெய்வமான ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பிறந்த இடமான தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரம் புவனகிரியில் பட்டி சந்தில் அவர் பிறந்த இல்லத்தை அவர் வழிபட்டு வந்த பெற்றாங்கரை ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயம் போன்றவற்றை பலரும் அறியும் வண்ணம் சிறப்பானதொரு ஆலயத்தை பட்டி சந்தில் உருவாக்கிய பெருமை மாண்புமிகு எம்.ஜி.ஆர் தமிழகத்தை ஆண்ட சமயம் அவரது அமைச்சரவையில் பெரும் பொறுப்புகளை வகித்த சிதம்பரம் அமைச்சர் பெருமான் மாண்புமிகு. சுவாமிநாதன் அவர்களையே சாரும்.
அவரும் அவருடன் தோளோடு தோளாய் நின்று பணியாற்றிய சிதம்பரம் வி.லட்சுமயராவ், புவனகிரி ஸ்ரீ கோவிந்தசாமி செட்டியார் போன்றவர்களுடைய பெருமுயற்சியாலும் சென்னை உயர்நீதிமன்ற அய்யாப்பிள்ளை டிரஸ்ட் மூலம் பெரும் தொகையை மாண்புமிகு அமைச்சர் ஸ்ரீ சுவாமிநாதன் பெற்று தந்து ஆலய நிர்மாணத்தை நேருக்குநேர் நின்று நடத்தி பலரும் வியக்கும் வண்ணம் 24.4.89 அன்று உலகமே “ஸ்ரீ ராகவேந்திரா” என போற்ற குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ சர்வதாரி வருடம் ஆனி மாதம் 11ஆம் தேதி 25.6.2008 பூரட்டாதி நட்சத்திரம், புதன்கிழமை, சிம்ம லக்கினத்தில் ஸ்ரீமத் மத்வாச்சாரிய மூல மஹாசமஸ்தானம் நஞ்சன்கூடு மந்த்ராலய ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மட பீடாதிபதிகளான ஸ்ரீ ஸ்ரீ 1008 சுஷ்மீந்திர தீர்த்த ஸ்ரீ பாதங்களவர்கள் அவ்வாறே உத்தராதிகளான ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸுயதீந்திர தீர்த்த ஸ்ரீ பாதங்கள்ளவர்கள் ஆகிய இரு மகான்களுடைய திவ்ய அம்ருத பொற்கரங்களால் ஸாக்ஷாத் ஜகத் குருக்களான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் அவதாரமான ஸ்வகிருஹத்தில் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சுப முகூர்த்தத்தில் “மூல மிருத்திகா பிருந்தாவன பிரதிஷ்டாபன மகா கும்பாபிஷேக மஹோத்சவம்”மிக சிறப்பாக நடைபெற்றது.
புதிய அன்னதான கட்டிடம் மற்றும் புதிய பிரார்த்தனை கட்டிடத்தையும் திறந்து வைத்தார்கள். மிருத்திகா பிருந்தாவனத்தை தரிசனம் செய்ய பல மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளார்கள்.
Click here :Bhuvanagiri Sri Raghavendra Swamy Avatara stala Mutt
புவனகிரி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி அவதார ஸ்தலம் மடம்

Comments
Post a Comment